மீண்டும் ஒரு இரும்பு மனிதி வேண்டாம்

collage

வசைபாடிய நாவுகள் தழுதழுத்தன

சாடிய நெஞ்சங்கள் கனத்தன

இது நிகழ் கால அனுதாபமா இல்லை நிரந்திர மரியாதையா?

அனுதாபம் எதிர்பார்திருந்தால் அவர் இரும்பு மனிதி அல்ல

இந்த அனுதாபம் கூட இல்லையென்றால் நாம் மனிதர்களே அல்ல

ஒரு பெண் இரும்பு மனுஷி என அழைக்கபடுவதில் பெருமிதம் இருக்கலாம்

மெய் சிலிர்த்தும் போகலாம்

ஆனால் சுதந்திரமாக சுற்றி திரிந்த பறவையின் சிறகுடைத்ததில் யாருக்கென்ன உவகை

இனிய இதயம் இறுகி இரும்பானதில் யாருக்கென்ன அகந்தை

கண்டிக்க தந்தை இல்லை

இருந்திருந்தாலும் கண்டிக்க தகுதி இருந்தவராக தெரியவில்லை

தாயின் முந்தானை பற்றி திரியும் பருவத்தில் அவள் அருகில் இல்லை

அருகில் இருந்த வருடங்களில் செலவிட நேரமில்லை

ஆசைபட்ட படிப்பு கிடைத்திட யோகம் இல்லை

பயிலும் திறன் இருந்தும் அன்னையிடம் அனுமதி இல்லை

திரை உலகத்தில் பிரவேசித்தால்

தங்கதாரகையாக பிரகாசித்தால்

மயக்கினால் மயங்கலுமானால்

முன்னறே திருமணம் முடித்த ஒருவருடன் உறவாடினால்

ஆசான் ஆனார் MGR

தமிழகத்தோடு சேர்த்து அவளையும் ஆளுமை செய்தார்

இரு உறவுகளிலும் துனை தேடியதா தனிமை தந்த மனநிலை?

இல்லை பிரயோகிக்கபட்டதா அவளின் ஏதுநிலை

MGR உடன் கொண்ட உறவில் அவளை தனித்து தூற்ற காரணம் என்ன?

அவர் செல்வாக்கு பெற்ற தலைவர் என்பதாலா?

இல்லை முதல்வர் என்பதாலா?

இல்லை ஆண் என்பதாலா? 

அவளை ஊர் பார்க்க சட்டசபையில் தாக்க துணிந்ததேன்?

மீள மாட்டாள் என நசைபண்ணினர்

ஆள தகுதியற்றவள் என எள்ளி நகையாடினர்

பெண்களை என்றுமே கீழ் நாே க்கிய சமூகம் அவளையும் குறைத்து மதிப்பிட்டனர்

கட்சி பெறுப்பு ஏற்றாள் – தூற்றினர்

முதல்வர் ஆனாள் – கொண்டாடினர்

இரும்பு கரம் கொண்ட தலைவி ஆனாள் – மண்டியிட்டனர்

ஆண்களை தவிரக்கலானாள்

தோழி துணை கொண்டு வாழ்ந்தால்

அவள் கண்டது நட்பா இல்லை துரோகமா?

மரணம் இயற்கயா செயற்கயா?

சீற்றம் கொள்ளும் இயற்கை கண்ணீரை விட்டு செல்வதை போலே இன்னல் மிகுந்த வாழ்கையில் பல கேள்விகளை விட்டு சென்றால்

அவளின் இழப்பில் துக்கம் கொள்ளும் சமூகமே நம்மை சார்ந்த மனிதிகளை நினைவு கூறுங்கள்

அவளை –

அவள் பாதையில் நடக்க விடுவோம்

அவள் விதியில் பயணிக்க வழி செய்வோம்

அவள் கல்வி பயில துணை நிற்போம்

நம்முடன் பணி செய்பவளை மதித்திருப்போம்

அவளின் முன்னேற்றத்தில் மகிழ்ந்திருப்போம்

மனதிற்கு ஒத்தவளை காதலிப்போம்

காதலிப்பவளை கைபிடிப்போம்

கைபிடிப்பவளை கண்ணியமாக நடத்தியிருப்போம்

தவழ்ந்து வரும் மகளை கைபிடித்து நடத்திடுவோம்

தன்னலமின்றி வாழும் தாயை தொழுதிடுவோம்

புணரும் சதையாக மட்டுமே காணாதிருப்போம்

அவளின் விருப்பதிற்கு செவி சாய்திருப்போம்

அவளின் ஆசைகளை கொன்று  இதயம் இறுக்கி இரும்பு மனிதி ஆக்காமலிருப்போம்

மீண்டும் ஒரு இரும்பு மனிதி வேண்டாம்!!!!

#Amma #Jayalalitha #IronLady #RIP

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s