

மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டத்தின் படி ஒரு குடும்பத்தை 15 வருடம் தத்து எடுப்பதன் மூலமாக பின்வரும் திட்டங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அவைகள் முறையே:


ஒவ்வொரு மாதம் 5 கிலோ அரிசியில் சில மளிகை பொருட்களும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பயனாளிகளின் குடும்பத்திற்கு மருத்துவ கட்டணத்திலும், மற்ற பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திலும் மானியமாக வழங்கப்படும். இதர அத்தியாவசிய செலவுக்கான பில்களை ஆடிட் செய்து மானியமாக வழங்கப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு நிதி கொடுக்கப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு கல்யாண சீர்வரிசையாக பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் மகப்பேறு காலத்தில் அவர்களுக்கு உதவியாக முதல் 9 மாதத்திற்கு தேவையான மருத்துவம், வளைகாப்பு சீமந்தம், பிரசவத்திற்கான மருந்து செலவினங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் சொந்தமாக இடம் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் உதவி கடன் வழங்கப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் வியந்து, ஆயத்து / உயிர் சேதம் ஏற்படக்கூடிய வேலைகளில் உள்ளவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அந்த துக்க நிகழ்விற்கு நிதி உதவி வழங்கப்படும்.
பயனாளிகளின் குடும்பத்தை தத்தெடுத்து 15 வருடம் நிறைவு பெறும்போது ஓய்வு ஊதியம் தரப்படும். அவர்களுக்கு இவை அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.
விளக்கம் : நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும். யார் ஒருவர் விடாமுயற்சியோடு காலம் தாழ்த்தாமல் முயற்சி செய்கிறாறோ அவர் விதியையும் வென்றிடுவார்.
திருக்குறள்
அதிகாரம் : ஆள்வினையுடைமை குறள் : 618
Our Heart and Purpose – மகிழ்ச்சி மக்கள் இயக்கம்
நாம் மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுடன் இருக்கிறோம் — பிறப்பிலிருந்து கல்வி வரை, திருமணத்திலிருந்து மருத்துவ தேவைகள் வரை, தினசரி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனஉறுதி உதவி வரை.
எமது குறிக்கோள் எளிதாகும்: எந்த ஒருவர் துயரமான தருணங்களில் தனியாக நடந்துகொள்ள வேண்டிய நிலை உருவாகக் கூடாது, உதவி இல்லாமையால் எந்த கனவும் நிறைவேறாமலே இறக்கக்கூடாது.
கருணை, கூட்டு முயற்சி மற்றும் பொருத்தமான செயல்களின் மூலம், மகிழ்ச்சி மக்கள் இயக்கம் ஒரு சமூகத்தை உருவாக்கச் செய்கிறது, அங்கு மகிழ்ச்சி பகிரப்படுகிறது, வாய்ப்புகள் அனைவருக்கும் அணுகக்கூடியவை, மற்றும் ஒவ்வொரு குடும்பமும் ஆதரிக்கப்பட்டதாக உணர்கிறது.
ஒன்றாக, நாம் மரியாதை, நம்பிக்கை மற்றும் உண்மையான மகிழ்ச்சியால் நிரம்பிய ஒரு உலகத்துக்கு ஒரு படியாக அருகே செல்கிறோம்.
வாழ்க மகிழ்ச்சியுடன் நமக்கு நாமே நான்கு பேருக்கு நன்மை செய் உடல் நலத்தோடு கூடிய பொருளாதாரம் இதை அனைவருக்கும் வழங்குவதே நம் நோக்கமாகும்.
எங்கள் சேவைகள்
ஒவ்வொரு நாளும் அன்பும் நம்பிக்கையும் உண்மையான உதவியுடனும் சமூகத்தை ஆதரித்து மகிழ்ச்சியை பரப்புதல்.
மாதந்தோறும் மளிகை பொருட்கள்:


ஒவ்வொரு குடும்பத்திலும் மாத வருமானம், அவர்களது குடும்ப செலவுகள் பல்வேறு வகையாக செல்கின்றன. இதில் உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இருப்பதால், மாதத்தின் கடைசி நாட்களில்—அதாவது 15-ம் தேதி முதல் மாத கடைசி நாள் வரை—பல குடும்பங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க உதவுவதற்காகவே, மகிழ்ச்சி மக்கள் இயக்கம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி ஆதரவு அளித்து வருகிறது. மாத கடைசி நாளில் ஏற்படும் பொருளாதார சிரமங்களை குறைப்பதே மகிழ்ச்சி மக்கள் இயக்கம் கொண்டு வந்துள்ள இந்த முக்கியமான திட்டத்தின் நோக்கமாகும். இது உதவியாக இருப்பதோடு மட்டுமின்றி, இதில் பங்குபெறும் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு மனிதநேயமான முயற்சியாகவும் செயல்படுகிறது.
கல்வி மற்றும் மருத்துவம்:
கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பொதுமக்கள் நலனுக்காக மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டம் மூலம் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல அரிய திட்டங்களை தீட்டி உள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்கும். மக்களுக்கு மருத்துவம் சார்ந்த உதவிகளும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டம் மூலம் செய்து வருகிறது. 5% முதல் படிப்படையாக 40% வரை வரி இல்லாத பில்கள் (Bills) அனைத்தும் இத்தகைய சலுகைகளை பெறமுடியும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் இத்தகைய சலுகையை செய்து தருகிறது. மேலும் இக்குடும்பத்தில் இருக்கும் மக்கள், அவர்கள் குடும்பத்தில் செய்யும் இதர செலவினங்களின் பில்களை (Bills) அவரவர் Trust மூலம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம்-ல் ஒப்படைத்தால், அதில் இருக்கும் GST தொகையை ஆடிட் செய்து, GST தொகையை மக்களுக்கே திரும்ப கொடுத்து விடுகின்றன, இதனால் பொதுமக்கள் மேலும் நல்ல பயனடைகின்றனர்.


★★★★★
Magizchi’s support changed my family’s life hope feels real again.
Anita R.
Connect
Join hands with magizchi, change lives together.
Phone
contact@magizchi.org
+91 82209 36901
© 2025. All rights reserved.
Quick Links
Contact
Location
Follow Us
Address
427, 2nd Floor , Ram nagar main road , Rani jewellery upstair - Tirupur
Address HO
NO 30 , Happy homes square , Vembuli amman street , chennai - 600016
