மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டத்தின் படி ஒரு குடும்பத்தை 15 வருடம் தத்து எடுப்பதன் மூலமாக பின்வரும் திட்டங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் அவைகள் முறையே:
  1. ஒவ்வொரு மாதம் 5 கிலோ அரிசியில் சில மளிகை பொருட்களும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

  2. பயனாளிகளின் குடும்பத்திற்கு மருத்துவ கட்டணத்திலும், மற்ற பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திலும் மானியமாக வழங்கப்படும். இதர அத்தியாவசிய செலவுக்கான பில்களை ஆடிட் செய்து மானியமாக வழங்கப்படும்.

  3. பயனாளிகளின் குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு நிதி கொடுக்கப்படும்.

  4. பயனாளிகளின் குடும்பத்தில் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு ல்யாண சீர்வரிசையாக பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

  5. பயனாளிகளின் குடும்பத்தில் மகப்பேறு காலத்தில் அவர்களுக்கு உதவியாக முதல் 9 மாதத்திற்கு தேவையான மருத்துவம், வளைகாப்பு சீமந்தம், பிரசவத்திற்கான மருந்து செலவினங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

  6. பயனாளிகளின் குடும்பத்தில் சொந்தமாக இடம் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்.

  7. பயனாளிகளின் குடும்பத்தில் சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் உதவி கடன் வழங்கப்படும்.

  8. பயனாளிகளின் குடும்பத்தில் வியந்து, ஆயத்து / உயிர் சேதம் ஏற்படக்கூடிய வேலைகளில் உள்ளவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும்.

  9. பயனாளிகளின் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அந்த துக்க நிகழ்விற்கு நிதி உதவி வழங்கப்படும்.

  10. பயனாளிகளின் குடும்பத்தை தத்தெடுத்து 15 வருடம் நிறைவு பெறும்போது, அவர்களுக்கு இவை அனைத்தும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை.

மாதந்தோறும் மளிகை பொருட்கள்:
ஒவ்வொரு குடும்பத்திலும் மாத வருமானம், அவர்களது குடும்ப செலவுகள் பல்வேறு வகையாக செல்கின்றன. இதில் உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு செலவினங்கள் இருப்பதால், மாதத்தின் கடைசி நாட்களில்—அதாவது 15-ம் தேதி முதல் மாத கடைசி நாள் வரை—பல குடும்பங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க உதவுவதற்காகவே, மகிழ்ச்சி மக்கள் இயக்கம் 15-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி ஆதரவு அளித்து வருகிறது. மாத கடைசி நாளில் ஏற்படும் பொருளாதார சிரமங்களை குறைப்பதே மகிழ்ச்சி மக்கள் இயக்கம் கொண்டு வந்துள்ள இந்த முக்கியமான திட்டத்தின் நோக்கமாகும். இது உதவியாக இருப்பதோடு மட்டுமின்றி, இதில் பங்குபெறும் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சி மக்கள் இயக்கத்திற்கும் இடையிலான உறவை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு மனிதநேயமான முயற்சியாகவும் செயல்படுகிறது.

எங்கள் சேவைகள்

ஒவ்வொரு நாளும் அன்பும் நம்பிக்கையும் உண்மையான உதவியுடனும் சமூகத்தை ஆதரித்து மகிழ்ச்சியை பரப்புதல்.
கல்வி மற்றும் மருத்துவம்:
கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பான எந்தவொரு தேவையாக இருந்தாலும், பொதுமக்கள் நலனுக்காக மகிழ்ச்சி மக்கள் இயக்கம் பல பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவித்து, அவர்களின் கல்வி செலவுகளை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மருத்துவ தேவைகளுக்காக தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு, குடும்பங்களின் பொருளாதார சுமையை தணிக்கிறது.

இந்த திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்கள் தங்களது அன்றாட அவசிய செலவுகளுக்கான பில்களை Trust மூலம் மகிழ்ச்சி மக்கள் இயக்கத்துக்கு வழங்கலாம். ஆய்வு செய்யப்பட்ட பில்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் நேரடியாக மக்களுக்கே திரும்ப வழங்கப்பட்டு, சமூக நலன் உறுதிப்படுத்தப்படுகிறது. அனைவருக்கும் பயன் தரும் மனிதநேய முயற்சியாக இத்திட்டம் செயல்படுகிறது

Volunteers handing out grocery bags to smiling families in a community center.
Volunteers handing out grocery bags to smiling families in a community center.
குடும்ப விழா:
மகிழ்ச்சி மக்கள் இயக்கம்-ல் இணைந்திருக்கும் பயனாளிகள் குடும்பத்தில் இருக்கும் பெண் பிள்ளை பூப்புனித நீராட்டு விழாவிற்கு தட்டு வரிசையுடன் பண உதவியும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக தாய்வீட்டு சீதனமாக இச்சடங்கை நம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் வழங்கி வருகிறது. ஏழை எளிய மக்களின் துயரை துடைக்கவே நம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் இத்தகைய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டம் அமைகிறது.
திருமண சீர்வரிசை:
குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவிற்கும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டம் பெரிய பங்கு ஆற்றி வருகிறது. அதாவது பெண்பிள்ளைகள் வைத்திருக்கும் குடும்பத்திற்கு திருமணத்தின் போது, தாய் வீட்டு சீதனமாக கொடுக்கப்படும் பொருட்கள் அனைத்துமே மகிழ்ச்சி மக்கள் இயக்கம்-ன் திட்டத்தின் மூலம் திருமணத்திற்கு சீர்வரிசையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. இதுவே ஆண் பிள்ளைகள் வைத்திருக்கும் குடும்பத்தின் திருமண விழாவிற்கு, மோட்டார் பைக் இலவசமாக மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இத்திட்டம் மக்களுக்கான சேலையில் பெரும் பங்கை ஆற்றிவருகிறது.


தொழில் கடன் வழங்குதல்:
வேலைகள் செய்பவர்கள் கூட சில நேரம் தொழில் செய்து பிழைக்கலாம் பல என்று எண்ணுவார்கள். தொழில் முதலீடு இல்லாத காரணத்தினால் திறமையான மனிதர்கள் வேலைக்கு செல்கிறார்கள். தன் திறமையை வெளிப்படுத்த மகிழ்ச்சி மக்கள் இயக்கம் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் தெரிவிப்பது என்னவென்றால், தொழில் கடன் உதவி மூலம் தன் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கலாம். MSM, SSI இதுபோன்ற அங்கீகாரம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வாகனம் ஓட்டுனர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பெண்கள் தையல் தொழிலில் சிறந்து விளங்க இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வட்டி இல்லா தொழிற்கடன் வழங்கி இத்தகைய திட்டத்தை மக்களுக்கு மகிழ்ச்சி மக்கள் இயக்கம் உதவிசெய்து வருகிறது. இவை அனைத்தும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் நிர்வாக உறுப்பினர்களின் தலைமையில் அவரவர் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்கடன் சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் விதிமுறைகளுக்கு உட்பட்டது. அவரவர் வருமானத்திற்கு ஏற்ப நிபந்தனைகளுக்கு உட்பட்டு இச்சலுகை வழங்கப்படும்.
Volunteers handing out grocery bags to smiling families in a community center.
Volunteers handing out grocery bags to smiling families in a community center.
வீடு கட்டி தந்து உதவுதல்:
இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு என்பது பெரும்பாலான மக்களுக்கு கனவாகவே உள்ளது. ஏழை எளிய மக்கள் அனைவரும் வாடகை வீட்டில் மட்டுமே வசித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சில நடுத்தர மக்கள் அயராது பாடுபட்டு தன் பெயரில் சொந்தமாக நிலத்தை வாங்கி விடுகின்றனர். பிறகு அந்த நிலத்திற்கு EMI கட்டுவதிலேயே அவர்களுக்கு காலம் கடந்து விடுகிறது. வீடு கட்ட முடியாமல் போய்விடுகிறது. இந்த நிலைமையை போக்கி 650 சதுரடி நிலம் சொந்தமாக வைத்திருக்கும் அனைத்து மக்களுக்கும், சொந்த வீடு நம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டம் மூலமாக கட்டி தரப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் மக்களின் சொந்த வீடு, கனவை நம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் உண்மையாக்கி, அவர்களுக்கு சொந்த வீட்டை கட்டி கொடுக்க உதவுகிறது. ஆனால், இந்த வீட்டை விற்கவோ அல்லது அடமானம் போடவோ கூடாது. முக்கியாக இத்திட்டம் சொந்த வீடு இல்லாத மக்கள் சொந்த வீட்டில் வாழவே கொண்டு வரபட்டுள்ளது. இத்திட்டம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் நிபந்தனைக்கு உட்பட்டது.
மகப்பேறு உதவி:
பிறக்கும் உயிர்க்கும் நன்மை செய்யும் விதமாக மகிழ்ச்சி மக்கள் இயக்கம்-ல் இணைந்திருக்கும் குடும்பங்களில் யாரேனும் தாய்மை அடைந்திருந்தால், அவர்கள் அவசர கால உதவியாக, மகளுக்கு தன் தாய் செய்யும் உதவிபோல், பெண்களின் மகப்பேறு காலத்தில் முதல் 9 மாத மருத்துவமும், பிரசவத்திற்கும், அதற்கு பின்வரும் 12 மாதத்திற்கு உள்ள மருந்து செலவினங்களையும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் ஏற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். அனைத்து தாய்மார்களுக்கும் இத்திட்டம் பெரும் பங்களிப்பை தருகிறது. தாய் மற்றும் சேய் இருவரின் நலனிற்காகவே இத்திட்டம் அமைகிறது.
இன்சூரன்ஸ் உதவி:
மகிழ்ச்சி மக்கள் இயக்கம்-ல் இணைந்து இருக்கும் குடும்பத்தில் எவரேனும் விபத்து ஆபத்து/உயிர் சேதம் ஏற்பட கூடிய வேலையில் இருப்பவர்களுக்கு, அவர்களின் பெயரில் இன்சூரன்ஸ் பதிவு செய்து வழங்குகிறது. இன்சூரன்ஸ் பற்றிய விவரங்கள் கூட தெரியாத ஏழை எளிய மக்கள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள வேலை செய்யும் நபர் வேலை நேரத்தில் விபத்தினால் உயிர் சேதம் ஏற்பட்டு விட்டால் அக்குடும்பத்தின் நிலை மிக மோசமாகி விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையை போக்க, அக்குடும்பத்தின் எதிர்கால உதவிக்காகவே இந்த இன்சூரன்ஸ் நம் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டத்தின் மூலம் செய்து தரப்படுகிறது.
நிதி உதவி:
மகிழ்ச்சி மக்கள் இயக்கம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. பல்வேறு வகையில் மக்களின் இன்னல்களை போக்க வழிவகை செய்து வருகிறது. ஒரு குடும்பத்தில் எப்பொழுது எது நடக்கும் என்று யாருக்கும் தெரிவதில்லை, அது போலத்தான் ஒரு குடும்பத்தில் துக்க நிகழ்வு திடீரென ஏற்பட்டுவிட்டால் அந்த நேரத்தில் குடும்பத்தில் வரும் சோதனைகளையும் குடும்பத்தில் ஏற்படும் பணக்கஷ்டத்திற்கும் உதவி செய்யும் நோக்கத்தில் திட்டமானது மகிழ்ச்சி மக்கள் இயக்கம் வழங்குகிறது. பயனாளிகளின் குடும்பத்தின் துக்க நிகழ்விலும் பங்கேற்று அக்குடும்பத்திற்கு நிதி உதவி செய்து, மகிழ்ச்சி மக்கள் இயக்கம் அதிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றது.
ஓய்வு உதவி தொகை:
15 வருட காலங்கள் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் தங்களின் குடும்பத்தை பாதுகாத்து வரும் பயனாளிகள், 15 வருட காலத்திற்குப் பிறகு அவர்கள் இதில் இருந்து வெளியேற விரும்பினால், திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியமாக பல சலுகைகள் வழங்கி வருகிறது. பயனாளிகள் தன் குடும்பத்திற்காக மேலும் அடுத்தடுத்த தலைமுறைகளும் இத்திட்டங்களை பெற்று பயனடைய விரும்பினால் இத்திட்டத்தில் தொடர்ந்து பயணிக்கலாம். இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய மகிழ்ச்சி மக்கள் இயக்கம்-ல் இணைந்து பல மாவட்டகளை சேர்ந்த Trust மற்றும் Trustee அவர்களின் வழிகாட்டுதலின்படி இத்திட்டத்திற்காக தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து, 15 ஆண்டு காலம் இத்திட்டத்தில் பயனடைவீர்கள். மேலும் மகிழ்ச்சி மக்கள் இயக்கம் வருடந்தோறும் மக்களுக்கு தேவையான சில மாற்றங்களை செய்து வருவதால் பயனாளிகள் தன் குடும்ப நலனுக்காக இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறது.